Tuesday, 18 February 2014

கொஞ்சம் சிரிக்காலாமா

படித்துக் கொண்டிருந்த காலம்!
பயமறியாத காலம்!
இப்போதும் படிக்கிறேன்!
அப்போதை சுவைக்கிறேன்!

தமிழாசியர் வகுப்பு!
தமிழ் கவிதை படிப்பு!
அமிர்தமென இனிப்பு!
அள்ளித்தந்தார் வனப்பு!

ஆனாலும் என் நினைப்பு
அங்கில்லை இருப்பு.
கவனித்த ஆசிரியர்
கடிந்ததவர் பொறுப்பு,

என்னய்யா பிச்சைய்யா!
சொன்னது என்னய்யா?
எண்ணத்தில் நுழைந்ததோ!
என்ன அது சொல்லென்றார்.

எல்லாமே நுழைந்ததய்யா.
என்றாலும் இறுதி பொத்தான்
இன்னும் அது நுழையவில்லை
என்னை அதில் நுழைக்குதென்றேன்.

பொத்தானை திருத்திக்கொண்டு
அத்ததனை மறைத்துக் கொண்டு
பாடுபொருள் என்னவெனறு
பாடிக்கேட்டார் அக்கவிக்கு..

அதுவொரு பெரும்பாடய்யா!
அதைப்பாடியவர் பாவமய்யா!
புரியாததைப் புரிந்தது போல்
பொய்வேடம் காட்டினேன்.

நானென்ன கேட்கிறேன்!
நீயென்ன சொல்கிறாய்!
பொருந்தவில்லை பதிலென்று
புளிய விலார் எடுத்தெழுந்தார்...

திருமண நாள் குறித்தோமா !
வரவேற்பும் அழைத்தோமா !!
பொருந்தாவிட்டால் என்னய்யா!
போகட்டும் விடுவீரென்றேன்.

கொல்லெனச் சிரிப்புச் சத்தம்
அள்ளியது அறையெங்கும்.
எல்லோரும் நாமுங்கூட
இணைந்துமே சிரிக்கலாமே!



கொ.பெ,பி.அய்யா,
வாங்க சிரிக்கலாம்!!

குழந்தையேன் சிரிக்கிறது?
குதுகலமாகிச் சிரிக்கிறதா?
தன்னைத்தானேதான்
உற்சாகமூட்டிடும்
அனிச்சச் செயலது..

உற்சாகந்தான் மனிதர்க்கு
ஊக்கமூட்டும் மருந்தாகும்..
நோய்களெதிர்க்கும்
தடுப்பு மருந்துதாம்
சிரிப்பென்பது..

சிரிப்பென்பது சேமிக்கல்ல
சிக்கனமில்லை சிரிப்புக்கு.
இறுக்கந் தொலைக்கும்
அருமருந்தாம்
சிரிப்பென்பது.

செலவளித்தால் சிரிப்பினை.
வரவெடுக்கலாம் வாழ்வினை.,
தீயகுணங்கள் தீர்த்திடும்
திவ்யமருந்தாம்
சிரிப்பென்பது.

முகத்திலழகு ஒளியூட்டும்
அகத்திலன்பு மொழியேற்றும்.
இனிக்கத்தானே இதயமே
ஏற்றமருந்தாம்
சிரிப்பென்பது.


கஞர்.கொ.பெ.பிச்சைவியா..






கானா பாட்டுத்தானா

கானாப்பாட்டுத்தானா
கலக்குறேனா நானா!!
வீணாப்போனேந்தானா!
வெளியே வாயேன் மீனா!

கோயம்பேடு சந்தை-அங்கு
கூடுது மாடு மந்தை!
மனசு அதுல சேர்ந்தே-தினம்
வாடுது உன்னச் சுமந்தே!

கூவம் நதியும் மணக்கும்--நீ
குங்குமங் கரைச்சா சிவக்கும்!
பாவந் தீருங்குளிச்சா- உன்
பாவாடை துவச்சி வழிஞ்சா!

நிறைஞ்சி ஓடுது பாரு-இது
நித்ய ஜீவ அடையாறு!
சாக்கடைப் போக்கு சாவாறு--என்
போக்கடை இதுவா வெளியேறு!.

கொடுங்கையூரு குப்பை--ஊரு
குடலப்புரட்டுது கப்பே!
படுத்தேன் இங்கே இப்பே--ஒரு
பாட்டும் பாடடி ஒப்பே!

அய்யோ பாவம் ஆனேனே--இன்று
மெய்யாக் கூவம் நானே!
பொய்யே போதை சுகமே---மீனா
செய்யுங்காதல் நிசமோ!



கொ.பெ.பி.அய்யா.
கானாவும் சென்னையும்

நானாப் போனாத்தானா--வரும்
கானாப் பாட்டுத்தானா.
தேனா ஆனக்கானாச்--சொல்லும்
சென்ன ஆனா ஆவனத்தானா.

சென்னை மக்கள் பேச்சு--அது
அன்னைத் தமிழ் மூச்சு.
மழலைத்தமிழ் அழகு--அதை
மனம் மகிழப் பழகு.

பல மொழிகள் பேசும்--இது
பாரதத்தின் விலாசம்.
இந்தியத்தின் ஒருமை--அது
இங்குதானே அருமை.

வெள்ளக்காரன் வந்தான்--இதை
விலைக்கு வாங்கிக் கொண்டான்.
சென்ன நாக்கர் பூமி--இது
சென்னப்பட்டணம் சாமி.

வெள்ளக்காரன் வல்லே-இன்று
இல்லே இங்கே சென்னை!
அள்ளுகிறார் கொள்ளை--விற்று
அடிக்கணக்கில் மண்ணை!

மாநகரம் என்றால் மதராசே--என்பார்
ஆனமுதல் மாநகராம் அது
அனைத்திந்திய புகழாம்--என்றும்
அது நமக்குப் பேராம்.

சோழ பல்லவத் தமிழாட்சி--நகர்
சூழக் கோவில் உருவாச்சி.
கலை வளர்ந்த ஊராம்--இன்றும்
கலைத் தமிழ் தேராம்.

நாலு நூறு ஆண்டு-எட்டும்
நமது சென்னை உதயம்..
ஓடும் இரு ஆறுகள்--ஊடே
ஆளும் சார்ச் கோட்டைகள்.

கல்விக்கான கழகங்கள்--இங்கு
காலம் வென்ற சின்னங்கள்.
சொல்லித்தரும் பெருமைகள்-எங்கும்
அள்ளித்தரும் செல்வங்கள்.

கோவிலுன்னா கோபுரம்--அது
கூறுவதும் கம்பீரம்.
இந்தியாவின் வாசலாம்--அது
இந்த சென்ட்ரல் ஸ்டேசனாம்.

எக்குமோரு பாரு---அது
தெற்கில் வாழும் ஜோரு.
நிற்கவும் இடமில்லாமல்--செல்லும்
நீளும் ரயில் பயணம்.

ஆசியாவில் பெருசுதான்--அது
தேசியத்தின் புதுமைதான்.
கோயம்பேடு தாசுமகால்--இது
கூடும் பஸ்டாண்டுதான்.

சென்னையின்னா மெரினாதான்--தமிழ்
அன்னை மடி அங்கேதான்!
தமிழுயுரப் பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில் ஆறுகிறார்.

வள்ளுவரின் கோட்டம்--கலை
வண்ணத்தமிழ் தோட்டம்.
சொல்லும் குறள் நோட்டம்--வகை
சொல்லிக் காட்டும் வாட்டம்.

இசை வளர்க்கும் மன்றஙகள்---இயல்
இசை நாடகங்கள்.
அசை போடும் ஊரென்றும்--தமிழ்
மிசையென்றால் மிகையாமோ!

பெருநகரப் பேர் வரிசை--இது
பெறும் நாலு பேரொன்றில்
பெருமையான பேரெல்லாம்--சீர்
பெற்றதெல்லாம் சென்னையே!

திராவிடத்தின் தலை நகராய் -அன்று
தேர்ந்திருந்த சென்னை.
தமிழுக்கே சொந்தமாய்--இன்று
தலை நிமிர்ந்து வாழுது.


கொ.பெ.பி.அய்யா.
எழுத்திலுந்திருவிளை யாடல்;


எழுத்திலுந்திருவிளை யாடல்;
வலுத்ததும் வளம் தேடல்.
கவிஞர்களின் வாதங்கள்;
கருத்து மழை சாதங்கள்.
பொறுத்திருந்து பாருங்கள்;
பொங்கி வரும் தேறுங்கள்.

சச்சரவுகள் ஆகியெழும்;
உச்சமது நன்மையாகும்.
பண்டுத் தேடும் ஓசைகளும்;
சண்டையல்ல விசையாகும்.
சோதனை வினைத் தேற்றம்;
மோதலென்றால் பிழை மாற்றம்.

களம் ஒன்று கிடைத்தது;
கருத்தாடத் தேர்ந்தது.
கலைஞர்கள் கூட்டமிது;
கருத்துப்பிழை நாட்டாது.
எழுத்திதைத் தந்தது;
வழுத்தவே வாயாடுது.

கவிஞர்கள் பல வகை
காலங்கண்ட உண்மையிதை;
அப்பப்போத் தமிழறிவை
ஐயம் போக்கும் பலர் புரிவை;
செப்பும் வித அழுத்தங்களை
தப்பென்பதென்ன வினை?

விட்டு விடுங்கள் அவர்களை;
முட்டிக் கொள்ளமாட்டார்கள்.
பெட்டகத்தைத்  திறக்கட்டும்;.
கொட்டி அதைக் காட்டட்டும்.
நட்டம்தான் அதனாலென்ன!
நமக்கது லாபம்தானே!

முடிச்சுகளைத்தானே-
முயன்று அவிழ்க்கிறார்கள்.
பிரச்சனைகள் தீரத்தான்-
பிரித்து மேய்கிறார்கள்
விலாங்குகள் அகப்படுமா--எனக்
கலக்கித் தேடுகிறார்கள்.

வேடிக்கை அல்ல இது;
வாடிக்கைதான் பொறு.
வாதங்களைக் கவனி;
வந்துவிழும் முத்தணி.
ஆழத்தின் புதைவெலாம்;
அத்தனையும் மின்னலிடும்.

இடியிடித்து மழைசொரியும்
வெடிவெடித்து ஒளிபொரியும்.
சலசலத்துத் தென்றல் வரும்.
கலகலத்துத் கானம் தரும்.
கடகடத்து தடந்துலங்கும்.
தடதடத்து இடம் விளங்கும்.

கொட்டாத மேளமுண்டோ!
தட்டாத தாளமுண்டோ!
கொட்டுவதும் தட்டுவதும்,
கெட்டிமேள மங்களமாம்.
கிட்டுவது நலமேதாம்.
எட்டுவதும் சுபமேதாம்.

எழுத்து ஒரு பலைகையாம்.
எழுதியே பழகுவோம்.
வழுத்துவோம் எழுத்தையாம்
வளருவோம் உயருவோம்.
எழுதுவதும் எளிதில்லையாம்
உறக்கந்தொலைத்த உழைப்பாம்.

எழுத்து ஒரு பள்ளிக்கூடம்:
இணைவரெலாம் மாணவராம்.
மாணவரே ஆசிரியராம்:
ஆசிரியரே மாணவராம்.
மாறி மாறிக் கற்பிக்கிறோம்.
மாறி மாறிக் கற்கின்றோம்:

புள்ளிகளும் தேர்வுகளும்;
பொருட்டில்லை வளரவும்.
அள்ளிட வேறெதுவும்;
அன்பு நட்பாம் நிகருண்டும்?
சொல்லுவோம் கவிதைகளும்;
வெல்லுவோம் வருங்காலம்.


கொ.பெ.பி.அய்யா.
அட்ட்ரா சக்க!அடிச்சு ஒட்டு!

அட்ரா சக்க அடிச்சான் சொக்க !
விட்ரா மக்கா பிடிச்சான் சவ்க்க!
எட்றா வண்டி இடிச்சான் பறக்க!

அருமை! அருமை !
விடாத புடிச்சுக்கோ!
குறைக்காதே வேகம் !
விசையை இன்னும் கூட்டிக்கோ!
அடி அடி அப்படியே
விலகாம அடிச்சு ஒட்டு!
நேரா! நேரா!நிறுத்தாத
நெக்கி ஒட்டு!நேரா ஒட்டு!

சபாஸ்!சபாஸ்!சரியாத்தான் போகுது.
ஒட்டு! ஒட்டு!ஓடிக்கிட்டே இரு!
அக்கம் பக்கம் பாக்காத!
அதுதான் சரியான பாத
அடிச்சு ஒட்டு!அடிச்சு ஒட்டு!

குமரியன் ஆனாலும்
குணத்தில் நீ ஒரு
குழந்தைதானய்யா!
தமிழா நீ ஒரு தாராளம்!
தோழமை உனக்கு ஏராளம்.

உனக்கும் இதுதான் உகந்த தினம்.
உண்மை நீ ஒரு குழந்தை மனம்.
உரிய வாழ்த்து உனக்குத்தானாம்
அரிய அன்பே எனக்கு நீதானாம்!

எழுத்துத் தளத்தில்
இணைந்த அன்புகளே!
இன்று எல்லோரும் நாம்
குழந்தைகளே!

கள்ளம் மறப்போம்!
உள்ளம் நிறைப்போம்!
அள்ளும் அன்பையே
அள்ளி வழங்குவோம்!

இனிப்பு அதுதான்
இதயம் அதுதான்.
எழுத்தும் அதுதான்.
இன்பம் அதுதான்.

எழுதுச்செல்வங்களே!
என்றும் குழந்தைகளே!
இன்றும் பயில்கிறோம்!
எழுத்துப் பள்ளியிலே!
நின்றும் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா

  
முன்னாள் ஆசிரியர்!

முன்னாள் ஆசிரியர்
இன்னாள் நடைவழியில்
கண்ணால் கண்டாரொரு
முன்னாள் மாணாக்கனை!

பாதையோரம் நின்றுமவன்
பார்த்துப்பார்தது புகைவிட்டான்..
ஆசிரியரைக் கண்டதும்
அணைப்பதுபோல் மறைத்திட்டான்.

ஆசிரியர் பெருமை கொண்டு
அறியாராய் சென்றிருக்கலாம்!
எந்நாளோ பயின்றவன்
இந்நாளும் மதித்தானென்று
பாராட்டி வாழ்த்திட
பக்கமவர் செல்கையில்.........

""என்ன சார் நீங்களுமா
எங்க அப்பந்தான் அப்படி!
பாத்தா புடுங்கி ஊதியிருவான்னு
பதுங்கி நின்னு புகவிட்டா
பாதி குடுனு கேக்கிறீங்கள சார்"

என்று கள்ளமில்லாமல் அவன்
நின்று சொல்லிப் புகைத்தான்!
பார்ததும் பாராமல் விலகுவதே
காத்துக் கொள்ளும் மரியாதை!!

பாவம் அந்த ஆசிரியர்!
பாடம் சொன்னதும் பாழோ!
கூவம் மணந்தாலும் சமூக
மாற்றம் நேராதோ!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




Monday, 17 February 2014

அய்யோ பாவம்!!

கானாப்பாட்டுத்தானா
கலக்குறேனா நானா!!
வீணாப்போனேந்தானா!
வெளியே வாயேன் மீனா!

கோயம்பேடு சந்தை-அங்கு
கூடுது பார் மாடு மந்தை!
மனசு அதுல சேர்ந்ததே-தினம்
வாடுது உன்னச் சுமந்தே!

கூவம் நதியும் மணக்கும்--நீ
குங்குமங் கரைச்சா சிவக்கும்!
பாவந் தீருங்குளிச்சாஉன்
பாவாடை துவச்சி வழிஞ்சா!

நிறைஞ்சி ஓடுது பாரு-இது
நித்ய ஜீவ அடையாறு!
சாக்கடைப் போக்குச் சாவாறு--என்
போக்கடை இதுவா வெளியேறு!.

கொடுங்கையூரு குப்பை--ஊரு
குடலப்புரட்டுது கப்பே!
படுத்தேன் இங்கே இப்பே--ஒரு
பாட்டும் பாடடி ஒப்பே!

அய்யோ பாவம் ஆனேனே--இன்று
மெய்யாக் கூவம் நானே!
பொய்யே போதை சுகமே---மீனா
செய்யுங்காதல் நிசமோ!


கொ.பெ.பி.அய்யா.




சிங்காரச் சென்னை!

சென்னை எங்கள் சென்னை-நல்ல
சிங்காரச்சென்னை!
பண்ணைப் பால் பண்ணை-அது
மாதாவரம் பண்ணை!

மேலே ஓடும் பாலம்--அழகு
கோலம் போடும் ஜாலம்!
கீழே வாழும் பாவம்--இன்னும்
வாழ்வதென்ன கோலம்!

பறக்கும் ரயிலு பாரு---அது
பார்க்க ரொம்ப ஜோரு!
மணக்குங் காவா கீழே--செத்த
மூக்கிருப்பதாலே!

உள்ளே மேலே ரயிலு--- நாளை
ஓடும் பாரு அழகு!
நில்லாமலே ஜனமே---- சிகுனல்
இல்லாதாலே நலமே!

ஓடும் ஆறு ரெண்டு--அதில்.
கூடும் சேறு கண்டு
பாடும் கொசு சிந்து--காதை
தேடும் தாலாட்டுண்டு.

மெரினா விக்கிற காத்து---அங்கே
மெனக்கெடுகிற கூத்து!
வரிப்பணத்த சேத்து--- தினமே
பரிபோகுதே நீத்து!

காலை மாலை சாலை--வரிசை
காத்துக் கிடப்பதே வேலை.
போகும் வேலை போச்சே--அய்யோ
பொழப்புக் கெடலாச்சே.

சொகுசு பஸ்ஸூ பேச்சு--அதில்
போகவில்ல மூச்சு,
சொகுசத்தான காணோம்---இதில
பவுசு ஒன்னும் வாணாம்.

ஏக்கங்களை மூட்டகட்டி--நல்ல
தூக்கங்களை பாடகட்டி
சுண்ணங் கீச்சி வீடுகட்டி--நடை
திண்ணையில் வாழுறாங்க.

குடிசை இடம் தேடுது---பாவம்
கூவத்தோடு ஓடுது !
கோபுர்ங்கள் ஊரிலே---ஏழை
சாபம் வாங்கி வாழுது!

சென்னை மொழி புரியுமா--அது
என்ன மொழி தெரியுமா?
உலகத்து மொழிகளிலே--ஒரு
கலக்கலான மொழியது.

இது சிங்காரச் சென்னை--இங்கே
இழுக்குதா உன்னை!
கைகழுவும் காகிதமாய்--நாளும்
கசங்கணுமா அண்ணே!

பொய்மறைக்கும் மெய்க்கோசம் ---அது
பூசிமணக்கும் பொய் வாசம்!
எல்லாமே செய் வேசம்---இது
சென்னை மேவும் வாசம்!

கொ.பெ.பி.அய்யா..