Monday, 17 February 2014

கொஞ்சம் சிரிக்காலாமா

படித்துக் கொண்டிருந்த காலம்!
பயமறியாத காலம்!
இப்போதும் படிக்கிறேன்!
அப்போதை சுவைக்கிறேன்!

தமிழாசியர் வகுப்பு!
தமிழ் கவிதை படிப்பு!
அமிர்தமென இனிப்பு!
அள்ளித்தந்தார் வனப்பு!

ஆனாலும் என் நினைப்பு
அங்கில்லை இருப்பு.
கவனித்த ஆசிரியர்
கடிந்ததவர் பொறுப்பு,

என்னய்யா பிச்சைய்யா!
சொன்னது என்னய்யா?
எண்ணத்தில் நுழைந்ததோ!
என்ன அது சொல்லென்றார்.

எல்லாமே நுழைந்ததய்யா.
என்றாலும் இறுதி பொத்தான்
இன்னும் அது நுழையவில்லை
என்னை அதில் நுழைக்குதென்றேன்.

பொத்தானை திருத்திக்கொண்டு
அத்ததனை மறைத்துக் கொண்டு
பாடுபொருள் என்னவெனறு
பாடிக்கேட்டார் அக்கவிக்கு..

அதுவொரு பெரும்பாடய்யா!
அதைப்பாடியவர் பாவமய்யா!
புரியாததைப் புரிந்தது போல்
பொய்வேடம் காட்டினேன்.

நானென்ன கேட்கிறேன்!
நீயென்ன சொல்கிறாய்!
பொருந்தவில்லை பதிலென்று
புளிய விலார் எடுத்தெழுந்தார்...

திருமண நாள் குறித்தோமா !
வரவேற்பும் அழைத்தோமா !!
பொருந்தாவிட்டால் என்னய்யா!
போகட்டும் விடுவீரென்றேன்.

கொல்லெனச் சிரிப்புச் சத்தம்
அள்ளியது அறையெங்கும்.
எல்லோரும் நாமுங்கூட
இணைந்துமே சிரிக்கலாமே!



கொ.பெ,பி.அய்யா,
கானாவும் சென்னையும்

நானாப் போனாத்தானா--வரும்
கானாப் பாட்டுத்தானா.
தேனா ஆனக்கானாச்--சொல்லும்
சென்ன ஆனா ஆவனத்தானா.

சென்னை மக்கள் பேச்சு--அது
அன்னைத் தமிழ் மூச்சு.
மழலைத்தமிழ் அழகு--அதை
மனம் மகிழப் பழகு.

பல மொழிகள் பேசும்--இது
பாரதத்தின் விலாசம்.
இந்தியத்தின் ஒருமை--அது
இங்குதானே அருமை.

வெள்ளக்காரன் வந்தான்--இதை
விலைக்கு வாங்கிக் கொண்டான்.
சென்ன நாக்கர் பூமி--இது
சென்னப்பட்டணம் சாமி.

வெள்ளக்காரன் வல்லே-இன்று
இல்லே இங்கே சென்னை!
அள்ளுகிறார் கொள்ளை--விற்று
அடிக்கணக்கில் மண்ணை!

மாநகரம் என்றால் மதராசே--என்பார்
ஆனமுதல் மாநகராம் அது
அனைத்திந்திய புகழாம்--என்றும்
அது நமக்குப் பேராம்.

சோழ பல்லவத் தமிழாட்சி--நகர்
சூழக் கோவில் உருவாச்சி.
கலை வளர்ந்த ஊராம்--இன்றும்
கலைத் தமிழ் தேராம்.

நாலு நூறு ஆண்டு-எட்டும்
நமது சென்னை உதயம்..
ஓடும் இரு ஆறுகள்--ஊடே
ஆளும் சார்ச் கோட்டைகள்.

கல்விக்கான கழகங்கள்--இங்கு
காலம் வென்ற சின்னங்கள்.
சொல்லித்தரும் பெருமைகள்-எங்கும்
அள்ளித்தரும் செல்வங்கள்.

கோவிலுன்னா கோபுரம்--அது
கூறுவதும் கம்பீரம்.
இந்தியாவின் வாசலாம்--அது
இந்த சென்ட்ரல் ஸ்டேசனாம்.

எக்குமோரு பாரு---அது
தெற்கில் வாழும் ஜோரு.
நிற்கவும் இடமில்லாமல்--செல்லும்
நீளும் ரயில் பயணம்.

ஆசியாவில் பெருசுதான்--அது
தேசியத்தின் புதுமைதான்.
கோயம்பேடு தாசுமகால்--இது
கூடும் பஸ்டாண்டுதான்.

சென்னையின்னா மெரினாதான்--தமிழ்
அன்னை மடி அங்கேதான்!
தமிழுயுரப் பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில் ஆறுகிறார்.

வள்ளுவரின் கோட்டம்--கலை
வண்ணத்தமிழ் தோட்டம்.
சொல்லும் குறள் நோட்டம்--வகை
சொல்லிக் காட்டும் வாட்டம்.

இசை வளர்க்கும் மன்றஙகள்---இயல்
இசை நாடகங்கள்.
அசை போடும் ஊரென்றும்--தமிழ்
மிசையென்றால் மிகையாமோ!

பெருநகரப் பேர் வரிசை--இது
பெறும் நாலு பேரொன்றில்
பெருமையான பேரெல்லாம்--சீர்
பெற்றதெல்லாம் சென்னையே!

திராவிடத்தின் தலை நகராய் -அன்று
தேர்ந்திருந்த சென்னை.
தமிழுக்கே சொந்தமாய்--இன்று
தலை நிமிர்ந்து வாழுது.


கொ.பெ.பி.அய்யா.
கூவம் அது பாவம்!

எங்கே மணக்குது--சாக்கடை
அங்கே மணக்குது?
சென்னை நகர் கூவத்திலே
தானே மணக்குது! .

கூவத்திலே பிறந்த நதி,
பாவமானது.
ஆறாகத் தேடி வந்து
சேறானது.

எழுபத்தைந்து கிலோ மீட்டர்
தூரம் ஓடுது.
இயற்கையெழில் தந்து அது
சென்னை சேருது,

சிங்காரித்து வங்கத்திலே
சங்கமித்தது.
ஓங்கரிக்க இன்று அது
அசிங்கமானது.

பதினாறு கிலோ மீட்டர்
பாழானது.
மூச்சடைக்கும் வீச்சமாகி
பீச்சும் நாறுது.

போக்குவரத்து வழியாகி
கால்வாயாகுமா?
சாக்கடைக்கே போக்காக
சீக்குமாகுமா?

வள்ளுவரும் நீராடி,
குறள் பாடினார்.
கொல்லும் வாசமாகியே
குறுகிப் போனதே!

கொசுக்கள் வாழும் உலகமாக
கூவம் ஆனதே!
குப்பைக்குக் கொள்ளிடமாய்
கூவம் மாறுதே!

திருவிற்கோலம் தொட்டு,
வரவானதே!
தூய்மை எனப் போற்றலான
கூவம் தொலைந்ததே!

பாழ்பட்ட கூவத்திற்கும்
வாழ்வளித்ததே!
பாவியந்த சுனாமிதான்
பாவந் தீர்த்ததே!

இன்னும் கோடி சுனாமிகள்
எழுந்து வந்தாலும்
அன்று மறு நாளிலேயே
அழிந்து நாறுமே!

படகு மீண்டும் விடலாமோ
பயனாகுமோ!
கிடப்பாகிப் போகுமோ!
கேள்வி இல்லையோ!


கொ.பெ.பி.அய்யா.















Sunday, 16 February 2014

பாட்டி நீ வாரியா!!

பாட்டி தூரம் போறியா?
கூட்டிப் போறேன் வாரியா?
லூட்டிப்  பையன் நானுயா
ஊட்டிப் போலாந் தானுயா!

ஊட்டியின்னு சொன்னதும்
பாட்டி பயந்தோடுறா!
“ஈட்டி மல உச்சியில்
என்னப் புடிச்சி தள்ளவா

போடா போடா புண்ணாக்கு
புரிஞ்சு போச்சு உன்னோக்கு
ஆள விடு சாமிடா !நான்
ஆளப்போற பொண்ணுடா!”

ஊட்டியின்னு சொன்னாலே!
ஓடுறாங்க பொண்ணுங்க .
பார்ட்டி இவன் பழிவாங்க
பாக்குறான்னு அஞ்சுறாங்க .

பாட்டி உசார்தான் வடை போச்சே!
ஊட்டி போற ஆச ஊசிப்போச்சே!
பாட்டியின்னு சொல்லாதே!
போட்டி போட்டு அடிப்பாங்க!

  

கொ.பெ.பி.அய்யா.